September 25, 2008

விஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்?

ஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன மாற்றம்?. அதே படத்தை அவனுடன் சேர்ந்து பார்க்கும் இன்னும் யாருக்கும் ரசிகனாகாத பலர் அவ்வாறு மாறுவதில்லையே ஏன்?. எம்ஜியார்,சிவாஜி கலக்கும் போதும் ஜெமினி,எஸ்எஸ்ஆருக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். கமல்,ரஜினி காலத்தில் விஜயகாந்த், சத்யராஜ்,ராமராஐன். அஜீத்,விஜய் காலத்தில் விக்ரம்,சூர்யா. இப்போது விஷால்,தனுஷ்,சிம்புக்கும் ரசிகர்கள். எப்போது, எப்படி ஒருவன் ரசிகனாக மாறுகிறான்?

இதற்கு முக்கிய காரணியாக விளங்குபவை

ஏற்கும் வேடங்கள்

ஒவ்வொரு மனிதனின் மனத்திற்கும் நெருக்கமாக சில கேரக்டர்கள் இருக்கும். நாம் இப்படி இருக்க வேண்டும் என்று நம் மனத்தில் இருப்பதை ஒருவன் திரையில் செய்யும் போது ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. அது போன்ற கேரக்டர்கள் தொடர்ந்து ஒரு நடிகரிடம் இருந்து வெளிப்படும் போது இவன் ரசிகனாகிறான். கோபக்கார இளைஞன் பாத்திரம் ஏற்கும் நடிகர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இதனால்தான்.

சிறந்த உதாரணம்
ராமராஐன் – கிராமப்புற இளைஞர்கள்


பாடி லாங்குவேஜ்

சுறுசுறுப்பான உடல் மொழி உள்ளவர்களை பலருக்குப் பிடிக்கும். ரஜினியின் உடல் மொழி அனைவரையும் கவர்ந்த ஒன்று. ரசிகர்கள் பேசிக்கொள்ளும் போது என்னடா உங்காளு சொங்கி மாதிரி இருக்கான்? போன்ற பேச்சுக்களை கேட்கலாம். எம்ஜியார்,விஐய் போன்றவர்களும் தங்கள் உடல்மொழியை எல்லா படங்களிலும் பாஸிட்டிவ்வாக கட்டமைத்திருப்பார்கள். ஏற்கும் வேடங்களை பொறுத்து அது மாறுவதில்லை.

நடிகரின் வயது

பார்வையாளனின் வயதுக்கு நெருக்கமான வயது அவசியம். இந்த தலைமுறையில் ரஜினியைவிட விஜய்,அஜீத்துக்கு ரசிகர்கள் அதிகம். அவன் தன் பிம்பமாக நடிகனை பார்க்கும் போது அதிக வயதானவனை நிராகரிக்கிறான். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து விஐய்க்கு அதிக அளவில் இளம் ரசிகர்கள் (ஒப்பீட்டளவில்) வருவது கடினம்.

சிறப்புத்திறமைகள்

நடனம்,சண்டை,நடிப்பு போன்றவற்றில் சிறப்புத்திறமை.

விஐயகாந்த் நல்லா சண்டை போடுறாரு, பிரபுதேவா நல்லா ஆடுறாரு என ரசிகர்கள் உருவாவார்கள்

ஊடக கட்டமைப்புகள்

இவர் நல்லவரு, வல்லவரு, தானதர்மம் செய்பவரு என நல்ல கட்டமைப்புகள். மற்றவரை பற்றி நடக்கும் பெண்பித்தர், கஞ்சன் போன்ற எதிர் கட்டமைப்புகள், ஒரு பார்வையாளனை ரசிகனாக்கும் வல்லமை பெற்றவை.

ஜாதி

இதுவும் ஒரு பங்கை வகிக்கிறது. தென்மாவட்டங்களில் இவர் கோட்டையில் மணவிழா, அவர் ராஜாங்கத்தில் காதுகுத்து போன்ற போஸ்டர்கள் சாதாரணம். நடிகரின் ஜாதி ஏற்பில்லை எனில் அவரை ரசிக்க மாட்டார்கள். இது இங்கு ஓரளவுக்கு குறைவே.
ஆனாலும் இதையெல்லாம் வைத்து ஒருவன் ரசிகனாவான் என்று சொல்ல முடியாது. அது ஒரு தங்க தருணத்தில் ஏற்படும் மாற்றம், காதலைப்போல. காதலியைக்கூட மாற்றுவார்கள் அபிமான நடிகனை மாற்ற மாட்டார்கள்.

விஐய்க்கு இதில் பல அம்சங்கள் சாதகமாக இருப்பதால் தான் இப்போது லயோலா கருத்துகணிப்பில் ரஜினியை முந்தியுள்ளார் விஜய், அழகிய தமிழ் மகன்,குருவி யின் தோல்விக்குப்பின்னரும்.

33 comments:

rapp said...

me the first

Spider said...

லயோலா கருத்து கணிப்பு எத்துணை தூரம் நம்பிக்கைகுரியது என்பது கேள்விக்குறியது.


தமிழ்நாட்டில் ஏ பி சி என்ற அனைத்து இடங்களிலும் முதல் இடத்தை பிடிப்பவர் ரஜினி ..

பி சி களில் அஜீத் வருகிறார்

ஆனால் விஜய் படங்களை குடும்பதோடு ரஜினி படங்களை பார்க்கும் அளவிற்க்கு இன்னமும் அவர் வளரவில்லை என்பதே என் கருத்து

புருனோ Bruno said...

வயது என்று நீங்கள் கூறியதற்கு பின்னால் இன்னொரு காரணம் இருக்கிறது - திரைப்பட பிண்ணனி.

முதல் தலைமுறை நடிகர்கள் (ரஜினி, விக்ரம்) பெரும்பாலும் தங்களின் 40ஆவது வயதிலேயே ஹிட் ஆகிறார்கள்.

ஆனால் திரைத்துறை குடும்பம் என்றால் அவர்களுக்கு எளிதாக “பிரேக்” கிடைக்கிறது

மேலும்
ஏற்கும் வேடங்கள் - தந்தையின் ஆலோசனை
பாடி லாங்குவேஜ் - தந்தையின் ஆலோசனை
நடனம்,சண்டை,நடிப்பு போன்றவற்றில் சிறப்புத்திறமை. - இதில் அவரின் சொந்த திறமை இருக்கிறது என்றாலும் இது குறித்த பயிற்சிகளை பள்ளி நாட்களிலேயே பிற குடும்ப சிறுவர்கள் பெறுவது குறைவு
ஊடக கட்டமைப்புகள் - இதில் கூட அவரது தந்தையில் பங்கு இருக்கிறது

--

எனவே விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு காரணம்

1. விஜய்
2. அவரது தந்தை

--

நான் கூறிய கருத்தை பார்த்து என்னை திட்டும் முன் பதிவர் பாலபாரதியின் இடுகை கூறித்து நான் எழுதிய இடுகை மற்றூம் மறுமொழிகளை ஒரு முறை படித்து விடுங்கள்

புருனோ Bruno said...

ஒரு செடி வளர விதையும் முக்கியம், நிலமும் முக்கியம்

விதை - திறமை
நிலம் - பின்புலம்

விஜய் செம்புலநீரில் விழுந்த வீரியமான விதை

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராப்,ஸ்பைடர்,புருனோ.

RATHNESH said...

டாக்டரின் கருத்து மிகச் சரி. விஜயின் இன்றைய நிலைக்கு அவர் அப்பாவின் பங்கு மிக காரணம். அதுவே ஒரு தனிப் பதிவுக்கான விஷயம்.

நையாண்டி நைனா said...

/*RATHNESH said...

டாக்டரின் கருத்து மிகச் சரி. விஜயின் இன்றைய நிலைக்கு அவர் அப்பாவின் பங்கு மிக காரணம். அதுவே ஒரு தனிப் பதிவுக்கான விஷயம்.
*/

என் பையனுக்கு நீங்கள் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்றால் நானும் அவனை வைத்து மொக்கை படம் மட்டுமே எடுப்பேன். பார்த்தே தீரவேண்டியது உங்கள் தலை விதி. என்று அவர் மிறட்டாமல் இருந்திருந்தால் விஜா இவளோ பெரிய ஆளா ஆகி இருக்க மாட்டார்...
அதனாலே நானும் ஒப்புகிறேன்.. விஜயின் வெற்றிக்கு அவர் தந்தையும் ஒரு காரணம்

புருனோ Bruno said...

//ஜாதி//

ஒரு குறிப்பிட்ட ஜாதியுடன் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால் அந்த நடிகரால் கண்டிப்பாக “உச்ச” நிலையை அடை முடியாது.

ரஜினிக்கோ கமலுக்கோ 80களில் 90களில் இருந்த ரசிகர்கள் யாருமே அவரது ஜாதியை பார்த்து இருக்க வில்லை. 2000க்கு பிறகு வேறு பல காரணங்களால் அந்த அடையாளம் ஒட்டிக்கொண்டதே தவிர அவர்கள் அதை ஒரு போதும் வெளிப்படுத்தியது கிடையாது.

விஜய், அஜித், விக்ரம், ராமராஜன் !! ஆகியோரின் வெற்றிக்கு ஒரு காரணம் அவர்கள் “ஜாதி நடிகராக” அடையாளப்படுத்தப்படாததால் தான் என்பது என் கருத்து

விஜய் என்ன ஜாதி என்பதும் ராமராஜன் என்ன ஜாதி என்பதும் சரத்குமார் ரசிகர்களில் கூட பலருக்கு தெரியாது.

அதே போல் விக்ரம் என்ன ஜாதி என்பது பல பிரசாந்த் ரசிகர்களுக்கு கூட தெரியாது.

ஷாம், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் ஆகியோர் அவர்களின் திரைத்துறை பணித் தடத்தின் (career - பணித்தடம்) ஆரம்ப கட்டத்திலேயே ஜாதி நடிகர் என்ற முத்திரையை பெற்று விட்டார்கள். இதுவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் செல்ல தடையானது.

திரைத்துறையிலும் அரசியலிலும் ஜாதி அடையாளம் என்பது இரு பக்கமும் ஏன் இருமுனையும் கூர்மையான கத்தி.

அதை வைத்து கேக்கை வெட்டியவர்களை விட கையை வெட்டிக்கொண்டவர்கள் தான் அடையாளம்.

1998 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் சரத்குமார் தோற்ற அதே நேரம் திருச்செந்தூரில் ராமராஜன் வெற்றி. இருவரும் ஒரே ஜாதி என்ற விபரம் எத்தனை பேருக்கு தெரியும் :) :)

விஜயகாந்தால் ஏன் தமிழக முதல்வராக முடியாது என்பதற்கு கூட ஒரு காரணம் அவரது ஜாதி (?? மொழி) அடையாளம் தான்.

கடையம் ஆனந்த் said...

ரஜினி படங்களை பார்க்கும் அளவிற்க்கு இன்னமும் அவர் வளரவில்லை என்பதே என் கருத்து

பரிசல்காரன் said...

!

rapp said...

//ஷாம், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ்//

டாக்டர் சார், மனோஜ் சரி, ஷாம் அண்ட் எஸ்.ஜே.சூர்யா ரெண்டு பேரும் இதுக்குக் கீழே எப்படி வர்றாங்க?

rapp said...

//விஜயகாந்தால் ஏன் தமிழக முதல்வராக முடியாது என்பதற்கு கூட ஒரு காரணம் அவரது ஜாதி (?? மொழி) அடையாளம் தான்.
//
அப்டீங்கறீங்க? ஆனா ஓரளவு மொழிப் போராட்ட வடுக்கள் பசுமையாக இருந்தபோதே எம்ஜிஆர் வந்துட்டார், அப்புறம் இப்போ அம்மா இருக்காங்க, ஏன் விஜயகாந்த் மட்டும் இதனால் பாதிக்கப்படப் போறார்?

rapp said...

//1998 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் சரத்குமார் தோற்ற அதே நேரம் திருச்செந்தூரில் ராமராஜன் வெற்றி. இருவரும் ஒரே ஜாதி என்ற விபரம் எத்தனை பேருக்கு தெரியும்//

அதேசமயம் சரத்குமார் அவ்வளவு ஓட்டு அங்கு வாங்கினத்துக்கும் அவரோட ஜாதிதான் மிக முக்கிய காரணம். அதுப்போல ராமராஜன் சார் வெறும் ஜாதியினால் ஜெயிச்சாருன்னு சொல்ல முடியாது. அப்போ இருந்த வெங்காய விலையேற்ற பிரச்சினை பெரும்பங்கு வகிச்சது இல்லைங்களா.

rapp said...

என்னதான் அப்பா நல்லாசிரியர் விருது வாங்கின கணக்கு வாத்தியாரா இருந்தாலும், பையன் கணக்குல புலியாவறது அவனோட தனிப்பட்ட திறமையினாலன்னு நினைக்கறேன். உதாரணமா ரவிச்சந்திரன் அவர்களோட புதல்வர் அம்சவர்தன், தியாகராஜன் அவர்களோட புதல்வர் பிரஷாந்த் இப்டி சொல்லிக்கிட்டே போகலாம் இல்லைங்களா :):):)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ரத்னேஷ், நையாண்டி நைனா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த், பரிசலார்,ராப்

கிரி said...

முரளிகண்ணன் சுவாராசியமான தலைப்புகளில் பதிவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

அனைவரும் கூறுவது போல விஜயின் வெற்றிக்கு அவர் அப்பா துணை நின்றார் என்பது உண்மை என்றாலும், அது அவரது துவக்கத்திற்கு மட்டும் தான்.

அதன் பிறகு முழுவது அவருடைய திறமை (அவருக்கெங்கே திறமை என்றெல்லாம் கேட்க கூடாது) மூலமாக முன்னேறியதே. எதோ ஒரு விதத்தில் மற்றவர்களை கவர்ந்து இருக்கிறார், இது எல்லோராலையும் முடியவில்லையே. எத்தனையோ இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,நடிகர்கள் மகன்கள் திரைக்கு வந்தார்கள் அனைவரும் இவரை போல ஜொலிக்கவில்லையெ. திறமை இல்லாத ஒருவன் எந்த காலத்திலும் முன்னேற முடியாது. தற்போது எந்த குழந்தையை கேட்டாலும் பிடித்த நடிகர் விஜய் தான் என்று கூறுகிறது. அத்தனை பேரை இவர் கவர்ந்து இருப்பது அவருடைய திறமை தானே.

//கோபக்கார இளைஞன் பாத்திரம் ஏற்கும் நடிகர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இதனால்தான். //

மிகசரியா கூறினீர்கள்.

தன்னால் செய்ய முடியாததை தன் பிம்பமாக ஒருவன் செய்வதை பார்க்கும் போது அவனுக்கு ரசிகனாகிறான். அதன் மூலம் தன் திருப்தியை பெற்று கொள்கிறான்.

//பார்வையாளனின் வயதுக்கு நெருக்கமான வயது அவசியம். இந்த தலைமுறையில் ரஜினியைவிட விஜய்,அஜீத்துக்கு ரசிகர்கள் அதிகம்//

ரொம்ப சரி. என்னுடைய கருத்து, ரஜினி எல்லாம் எவெர் கிரீன் நடிகராக கருதப்பட்டு எப்போதும் பிடித்த நடிகராகவும் தற்போது பிடித்த நடிகராக விஜய் அதிக மக்களை கவர்ந்துள்ளார் என்பது என் தனிப்பட்ட கருத்து. எப்படி எம் ஜி ஆர் க்கு பிறகு ரஜினி அனைவரையும் கவர்ந்தாரோ அதே போல.

//அது ஒரு தங்க தருணத்தில் ஏற்படும் மாற்றம், காதலைப்போல. காதலியைக்கூட மாற்றுவார்கள் அபிமான நடிகனை மாற்ற மாட்டார்கள்.//

கலக்கலாக கூறினீர்கள், எனக்கு தெரிந்து ரொம்ப குறைவாகவே இது நடந்து இருக்கிறது. இது நடிகர் என்று இல்லை தனக்கு ரொம்ப பிடித்தவரை வெறுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதற்க்கு மிக மோசமான அல்லது மனது வெறுக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடந்தாலே அதற்க்கு வாய்ப்பு.

கிரி said...

தட்ஸ்தமிழ் ல் விஜய் முதலிடம் வந்ததுக்கு வந்து இருக்கும் கமெண்ட் எல்லாம் செம காமெடி ஹா ஹா ஹா தற்போது தான் படித்தேன் :-)))

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கிரி

கார்க்கி said...

இதுக்கு பதில் ஒரு பதிவாகவே போடலாம் என்றிருக்கிறேன்...

சுபாஷ் said...

:)
ரித்துதீசுக்கு ஏன் அதிக ரசிகர்கள்?
இதுல அவரு அந்த கேட்டகரிலபா வாராரு?

narsim said...

//விஜய் செம்புலநீரில் விழுந்த வீரியமான விதை//

கலக்கல் மருத்துவர்.புருனோ


நர்சிம்

Viji said...

முரளி சார் சினிமா பற்றிய உங்கள் பதிவுகள் வித்தியாசமாகவும், விவரமான அலசல்களாகவும் உள்ளது.

புருனோ Bruno said...

//அதேசமயம் சரத்குமார் அவ்வளவு ஓட்டு அங்கு வாங்கினத்துக்கும் அவரோட ஜாதிதான் மிக முக்கிய காரணம். அதுப்போல ராமராஜன் சார் வெறும் ஜாதியினால் ஜெயிச்சாருன்னு சொல்ல முடியாது. அப்போ இருந்த வெங்காய விலையேற்ற பிரச்சினை பெரும்பங்கு வகிச்சது இல்லைங்களா//

ராப்,

சரத்குமார் வாங்கிய ஓட்டுக்களுக்கு அவர் ஜாதி காரணம்
சரத்குமார் வாங்காத ஓட்டுகளுக்கும் அவரது ஜாதி காரணம்

ராமராஜன் வாங்கிய் ஒட்டுக்களுக்கு அவர் ஜாதி காரணமில்லை
ராமராஜன் வாங்காத ஓட்டுகளுக்கும் அவர் ஜாதி காரணமில்லை

இதை கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சரியாக வந்தது ராமராஜனுக்கு தான் :) :)

புருனோ Bruno said...

//ஆனா ஓரளவு மொழிப் போராட்ட வடுக்கள் பசுமையாக இருந்தபோதே எம்ஜிஆர் வந்துட்டா//

ஏனென்றால் எம்.ஜி.ஆரை ஒரு மலையாளியாக தமிழர்கள் பார்க்கவில்லை

புருனோ Bruno said...

// தற்போது எந்த குழந்தையை கேட்டாலும் பிடித்த நடிகர் விஜய் தான் என்று கூறுகிறது. அத்தனை பேரை இவர் கவர்ந்து இருப்பது அவருடைய திறமை தானே.//

இது முழு உண்மை. ரசிகர்களை அவர் கவர்ந்தத்ற்கு காரணம் அவர் தான்.

ஆனால் இந்த எண்ணிக்கை 2008ல் வந்ததற்கு காரணம் அவர் தந்தை. இல்லை என்றால் இந்த எண்ணிக்கை வர 2015 ஆகியிருக்கும்

புருனோ Bruno said...

//கலக்கல் மருத்துவர்.புருனோ//

நான் கூற வந்ததை சரியாக புரிந்த கொண்டதற்கு நன்றி

முரளிகண்ணன் said...

@கார்க்கி
உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

@ சுபாஷ்
ரித்தீஷ் நமக்கு நாமே திட்ட வகையறா

@நர்சிம்
வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

@ விஜி
தங்கள் கருத்துக்கு நன்றி

@புருனோ

தொடர் ஆதரவுக்கு தொடர் நன்றிகள்

விடமாட்டேன் said...

விஜய் என்ன ஜாதி என்பதும் ராமராஜன் என்ன ஜாதி என்பதும் சரத்குமார் ரசிகர்களில் கூட பலருக்கு தெரியாது.

அதே போல் விக்ரம் என்ன ஜாதி என்பது பல பிரசாந்த் ரசிகர்களுக்கு கூட தெரியாது.

Nice!

முரளிகண்ணன் said...

விடமாட்டேன், தங்கள் வருகைக்கு நன்றி

இனியா said...

"விஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்?"

It shows how many fools are there in TN

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி இனியா